பான் ஆசியா வங்கியின் தலைவர், மூத்த நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான முதல் வேலை நாளான 2020 ஜனவரி 1 ஆம் தேதி கோல்பெட்டியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் புத்தாண்டை சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
இந்த விசேட நிகழ்வில் ஊழியர்களிடையே உரையாற்றிய தவிசாளர் திரு.ஜி.ஏ.ஆர்.டி பிரசன்னா, 2019 ஆம் ஆண்டில் அனைத்து ஊழியர்களும் தொடர்ந்தும் வழங்கிய ஆதரவு மற்றும் அயராத முயற்சிகளை அங்கீகரித்ததோடு, 2020 ஆம் ஆண்டிலும் அதே ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் மேலும் கூறினார்.
வங்கியின் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. நிமல் திலேகெரட்ன அவர்களும் கூட்டத்தில் உரையாற்றுகையில், "பான் ஆசியா அணியின் உணர்வில் எனக்கு அளப்பரிய நம்பிக்கை உள்ளதுடன் எதிர்வரும் ஆண்டில் மேலும் பல உயரங்களை எட்டுவதற்கு எதிர்நோக்கியுள்ளேன்" என குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பான் ஆசிய வங்கிக் கிளைகளினதும் பணியாட்டொகுதியினர் புத்தாண்டின் விடியலைக் குறிக்கும் வகையில் மத வைபவங்களையும் நடாத்தினர்.
பான் ஆசியா வங்கி சிறந்த நிதிச் சேவைகளை வழங்கும் அதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அதன் பெறுமதிவாய்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் 2020 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான மற்றும் சுபீட்சமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை வழங்குவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.