News & Events Sri Lanka - Pan Asia Banking Corporation

செய்திகளும் நிகழ்வுகளும்

பான் ஆசியா வங்கி நீண்டகால ஊழியர்களை கவுரவித்தது

நாட்டின் உண்மையான இலங்கை வங்கியான பான் ஆசியா வங்கி, அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அதன் நீண்டகால ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரித்தது. 20 வருடங்களுக்கும் மேலாக வங்கியில் சேவையாற்றிய 17 ஊழியர்களுக்கும், 25 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய 2 ஊழியர்களுக்கும், மேலும் 2 முன்னோடி ஊழியர்களுக்கும் பான் ஆசியா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆற்றிய அன்பான உரைக்கு மத்தியில் நன்றியும் வெகுமதியும் வழங்கப்பட்டது. உடனடியான கடந்தகாலத் தலைவர் திரு. ஜி. ஏ. ஆர்.டி. பிரசன்னா அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பான் ஆசியா வங்கிக்கு அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் கொண்டுவரும் பெறுமதியை எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி நிமல் திலேகெரட்ன, "பல ஆண்டுகளாக தன்னலமற்று வங்கிக்கு சேவையாற்றிய குழு உறுப்பினர்களை கௌரவிப்பது முழு வங்கியும் எதிர்பார்க்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். நாட்டிற்கு அதன் பெறுமதியான சேவையுடன் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையின் தூணாக தலைநிமிர்ந்து நிற்கும் உண்மையான இலங்கை வங்கி என்ற வகையில் இந்த வங்கியை இன்றுள்ள நிலைக்கு கொண்டு வருவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் பெறுமதிமிக்க பங்களிப்பிற்காக இந்த பெறுமதியான ஊழியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். அவர்கள் புதிய உறுப்பினர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்."

விசுவாசமான பணியாட்டொகுதியினருடன் இணைவதற்கும், அதன் மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு உண்மையான இலங்கை வங்கிக்காக பணியாற்றுவதில் ஒரு பெருமித உணர்வை வளர்ப்பதற்கும் வங்கியின் 25 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இந்நிகழ்வு இருந்தது.

புகைப்படத் தலைப்பு:

பான் ஆசியா வங்கியின் உடனடி முன்னாள் தலைவர் திரு.ஜி.ஏ.ஆர்.டி பிரசன்னா , திரு.நிமல் திலேகெரட்ன – நிர்வாக இயக்குனர் /தலைமை நிர்வாக அதிகாரி, திரு சம்பத் அல்விஸ் – மனித வளங்கள் மற்றும் பான் ஆசியா வங்கியின் கூட்டுத்தாபன முகாமைத்துவத்தின் தலைவர் ஆகியோருடன் நீண்டகால ஊழியர் உறுப்பினர்கள்

விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்


இணைய வங்கி

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

மின்-அறிக்கைகள்

உள்ளடக்கத்திற்குச் செல்க